பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ’அரசமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம். பாலினம், மதம், சாதி உள்ளிட்டவற்றால் பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
ஆனால், இந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜைனர்கள் இந்து திருமணச் சட்டம் 1995இன் படியும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தனித்தனி சட்டத்தின் கீழும் விவாகரத்து பெறுகின்றனர். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின், 14, 15, 21 உள்ளிட்ட பிரிவுகளுக்கு முரணாக உள்ள விவாகரத்து சட்டங்களை நீக்கி, குடிமக்கள் அனைவருக்காகவும் ஒரே சட்டம் இயற்றப்பட வேண்டும்.