பொதுவாக விமானத்தில் பயணிகளை ஏற்றும் முன் அவர்கள் கடும் பரிசோதனைக்கு உட்படுத்துவது வழக்கம். அதிலும் குறிப்பாக விமானங்களும் உட்சபட்ச சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கோஏர் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென்று கேபினிலிருந்து இரு புறாக்கள் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால், விமானத்தில் காத்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானத்திற்குள் பறந்த புறாக்களை பயணிகள் சிலர் பிடிக்க முயன்றனர். இருப்பினும், புறாக்கள் அவர்கள் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டியது. அப்போது, விமானத்தில் இருந்த ஊழியர்கள் விமானத்தின் கதவுகளை திறந்ததையடுத்து, புறாக்கள் வெளியே பறந்துச் சென்றன.
இந்தச் சம்வத்திற்கு பயணிகளிடம் கோஏர் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இதையும் படிங்க: லீப் தினத்தில் ஒற்றுமை சிலை முன் புதிய முயற்சி