தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவில் புகைப்பட செய்தியாளர் குத்திக் கொலை! - Photo journalist stabbed to death, financial dispute, Photo journalist

ஹைதராபாத்: தெலங்கானாவில் புகைப்பட செய்தியாளர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தெலங்கானாவில் புகைப்பட செய்தியாளர் குத்திக் கொலை  Photojournalist stabbed to death over financial dispute in T'gana  Photo journalist stabbed to death, financial dispute, Photo journalist  புகைப்பட செய்தியாளர், தெலங்கானா
Photo journalist stabbed to death over financial dispute in T'gana

By

Published : Mar 3, 2020, 8:00 PM IST

தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்னினேனி சுனில் ரெட்டி (வயது 38). இவர் வாராங்கல் செய்தியாளர்கள் சங்கப் பொருளாளராகவும், பத்திரிகை ஒன்றில் மூத்த புகைப்பட செய்தியாளராகவும் பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் பாஸ்ரா கிராமத்தில் பேக்கரி நடத்தி வருபவருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பேக்கரி கடை உரிமையாளருக்கும், ரெட்டியின் நண்பருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்தத் தகராறைத் தீர்த்து, மீதிப் பணத்தை பேக்கரி உரிமையாளரிடம் இருந்து வாங்குவதற்காக, சுனில் ரெட்டியை அவரது நண்பர் பாஸ்ரா கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து இருவரும் நேற்றிரவு பாஸ்ராவுக்குச் சென்றனர். அப்போது பேக்கரி உரிமையாளருக்கும், ரெட்டியின் நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றவே, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் பேக்கரி உரிமையாளர் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்துத் தாக்கினார். இதில் ரெட்டியின் மீது கத்தி பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து ரெட்டியின் நண்பருக்கும் கத்திக் குத்து விழுந்தது.

இதில் ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரின் நண்பருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க :விசாரணையை எதிர்கொள்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details