மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ரைசா அன்சாரி, தேவி அகில்யா பல்கலைக்கழகத்தில் மெட்டிரியல் சைன்ஸ் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதனால், கரோனாவிற்கு முன்னதாக ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கல்விச் சாலைகள் திறக்கப்படாதநிலையில், குடும்ப வறுமை காரணமாக தற்போது சாலைகளில் தள்ளு வண்டியில் பழங்களை விற்றுவருகிறார்.
இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் தள்ளுவண்டியை அகற்ற முற்பட்டுள்ளனர். அப்போது அலுவலர்களுடன் தன் தரப்பு நியாயத்தை ரைசா ஆங்கிலத்தில் விளக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.