டெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா 8ஆம் கட்ட வந்தே பாரத் திட்டம் டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரவித்துள்ளார்.
தனது வாராந்திர ஊடகச் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “8ஆம் கட்டமாக வந்தே பாரத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 15 நாடுகளிலிருந்து 987 சர்வதேச விமானங்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 1.5 லட்சம் மக்களைத் திருப்பி அனுப்ப முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், 18 நாடுகளுடன் ஏர் பபுல்ஸ் ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது எனக் கூறினார்.