கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. எனவே வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் ’வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இது குறித்து, கடந்த மே 7ஆம் தேதி முதல் மத்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக முக்கியத் தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதில், “ஐந்தாம் கட்ட வந்தே பாரத் திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதிவரை மொத்தம் 900 விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 22 நாடுகளிலிருந்து 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.