டெல்லி: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கடந்த ஆறு மாத காலமாக போர்பதற்றம் நீடித்து வந்த சூழலில், இந்தியா தற்போது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுடன் இணைந்து கடற்படையை வலுவாக்க பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு தடைகளுக்கு நடுவே, இந்தியா இந்தப் பயிற்சியை மேற்கொள்வதில் முனைப்புடன் செயல்படுவதாக ராணுவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோ-பசிபிக் பகுதிகளில் தொடர்ந்து சீன ராணுவம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இது அண்டை நாடுகளுக்கிடையேயான பேசுபொருளாக மாறிவருகிறது. இந்நிலையில், இந்தியாவின் இந்த நகர்விற்கு அமெரிக்கா ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பங்கேற்கும் நாடுகளின் உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.