தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் சூறையாடல் - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்ட வந்த கும்பல் அவர் தப்பியோடியதால் பங்கை சூறையாடிவிட்டு வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றனர்.

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் சூறையாடல்
முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் சூறையாடல்

By

Published : Oct 30, 2020, 2:40 PM IST

புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆலங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் பணி புரிந்துவந்தார்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயபால் என்பவரின் கொலை வழக்கில் தொடர்பு இருந்ததால், இவர் சிறை சென்றார். அதற்கு பின்னர் இவர் பெட்ரோல் பங்க் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

முன்விரோதம் காரணமாக பெட்ரோல் பங்க் சூறையாடல்

பின்னர் திண்டிவனத்தில் குடிபெயர்ந்த பூபதி, சம்பவத்தன்று புதுச்சேரி ஆலங்குப்பத்தில் தான் பணிபுரிந்த பெட்ரோல் பங்கில் தன்னுடன் பணிபுரிந்த நண்பர்கள் ஏசுராஜா, சரவணன், செல்வகுமார் ஆகியோரை சந்திப்பதற்காக வந்துள்ளார். அப்போது பூபதி பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ள தகவல், ஜெயபால் ஆதரவாளர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து மூன்று நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பூபதியை கொலை செய்ய அந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளனர். ஆனால் இவர்களை கண்ட பூபதி மற்றும் அவரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மூன்று நபர்களும் பங்கை சூறையாடிவிட்டு வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றனர். இந்த காட்சி அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற மூன்று நபர்களையும் தன்வந்திரி நகர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சமுதாய நலக்கூடம் சூறையாடல்: காவல்நிலையம் முற்றுகை

ABOUT THE AUTHOR

...view details