கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கச்சா எண்ணெய் தேவை பெருமளவு குறைந்ததால் கச்சா எண்ணெயின் விலையும் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துவருகிறது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு தொடர்ந்து அதிகரித்ததால், உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கு பணம் கொடுத்து கச்சா எண்ணெயை எடுத்துச் செல்ல கூறுமளவு நிலைமை மோசமானது.
தற்போது சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 28.25 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும். இருப்பினும் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துவருவதால் மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.