சவூதி அரேபியா அராம்கோரில் நடந்த எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலால், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. அராம்கோர் தாக்குதலால் உலகின் ஐந்து சதவிகித எண்ணெய் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோலின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. ரூ.73.62ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், 0.29 பைசா உயர்ந்து ரூ.73.91யை எட்டியுள்ளது.
petroleum minister Dharmendra pradhan இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ’சவூதி அரேபியா அராம்கோரில் நடத்தப்பட்ட தாக்குதலால் நமது எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோகத்தில் எந்த விதப் பாதிப்பும் இல்லை. ரியாத்தில் உள்ள இந்திய தூதர், அராம்கோவின் தலைமை மேலாண்மை அதிகாரிகளிடம் பேசும்போது, இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என உறுதி செய்துள்ளார். நமது எண்ணெய் நிறுவனங்கள் மூலம் இந்த மாதத்துக்கான எண்ணெயை மொத்தமாக வாங்கி சேமித்துக் கொள்ளலாம்’ எனவும் தெரிவித்துள்ளார். இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் வாசிங்க: சவுதி கச்சா எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் - பெரும் பாதிப்பை சந்திக்கும் இந்தியா?