சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், தலைநகர் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
அதன்படி டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.91-க்கும், கொல்கத்தாவில் ரூ.76.60-க்கும், மும்பையில் ரூ.79. 57-க்கும் மற்றும் சென்னையில் ரூ.76.83-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகின்றன.
டெல்லியில் இன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.66.93-க்கும், கொல்கத்தாவில் ரூ.69.35-க்கும், மும்பையில் ரூ.70.22-க்கும், சென்னையில் ரூ.70.76-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகின்றன.