தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

சீனாவில் கொரனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

petrol
petrol

By

Published : Jan 25, 2020, 1:03 PM IST

Updated : Mar 17, 2020, 4:55 PM IST

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்ததை தொடர்ந்து, தினமும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

அதன்படி, இன்று இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் 27 பைசாவும், டீசல் 30 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் அளித்துள்ள பட்டியலின்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.16, மும்பையில் ரூ.79.76, கொல்கத்தாவில் ரூ.76.77, சென்னையில் ரூ.77.03 என்ற விலைக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல், டிசல் விலைப்பட்டியல்

டீசலின் விலையைப் பொறுத்தவரையில், டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.67.31, மும்பையில் ரூ.70.56, கொல்கத்தாவில் ரூ.69.67, சென்னையில் ரூ.71.11 என்ற விலைக்கு விற்பனை ஆகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை முன்பு ஒரு பீப்பாய் 62.07 டாலர் என்ற அளவில் இருந்தது. அது தற்போது குறைந்து 60.56 டாலருக்கு வர்த்தகம் ஆகிறது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: வரி விலக்கை எதிர்பார்க்கும் வரி வல்லுநர்கள்

Last Updated : Mar 17, 2020, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details