தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் - விசிகவினர் ஆர்ப்பாட்டம் - புதுச்சேரி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Petrol and Diesel price hike back puducherry vck protest
Petrol and Diesel price hike back puducherry vck protest

By

Published : Jun 25, 2020, 4:46 PM IST

புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ பொழிலன் தலைமையில் சுதேசி மில் அருகில் கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியினர், “மத்திய அரசு கரோனா நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் குறைந்துள்ள நேரத்தில், மத்திய அரசு, ஏழை, எளிய மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரியில் தற்போது கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்கு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் செந்தில்குமார், ஜான்சன், அலெக்ஸ், ஏகாம்பரம் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details