நாடாளுமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியுடன் நுழைய முயற்சித்துள்ளார். அப்போது, காவல்துறையினர் அவரை கைது செய்து நாடாளுமன்ற காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் விசாரித்ததில் அவர் பெயர் சாகர் இசா என்றும், இவர் பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிமின் தீவிர ஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைய முயன்றவர் கைது! - நாடாளுமன்ற வளாகம்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைய முயன்ற அடையாளம் தெரியாத நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Parliament
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைய ஒருவருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் 2001-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டது.