தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மின்வயரில் சிக்கி துண்டாகிய ஊழியரின் தலை - அச்சுறுத்தும் வீடியோ - தலை துண்டாகி மின் ஊழியர் பலி

திஸ்பூர்: பிஸ்வானாத் மாவட்டத்தில் மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வயரில் சிக்கிய மின் ஊழியரின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

electric

By

Published : Jun 26, 2019, 2:43 PM IST

அசாம் மாநிலம் பிஸ்வானாத் மாவட்டத்தின் சாரியாலி பகுதியில் உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு சென்ற மின்துறை ஊழியரான ராபின் தாஸ் என்பவர், மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மேல் சென்று கொண்டிருந்த 11 ஆயிரம் வோல்ட் உயர் மின் வயரில் சிக்கியுள்ளார். இதில் அவரது தலை பகுதி முற்றிலுமாக மின் வயரில் சிக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது.

வீடியோ காட்சி

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவர் மேலிருந்து கீழே விழுந்தபோது, அவரின் தலை துண்டாகி உயிரிழந்தார். இந்த கொடூரச் சம்பவத்தை அருகிலிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்திருக்கிறார். மனதை உறைய வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details