தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதற்கு துணைநிலை ஆளுநர் கண்டனம்!

ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு துணைநிலை ஆளுநர் ஜிசி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார்.

perpetrators-shall-be-brought-to-justice-jammu-and-kashmir-lg-on-waseem-baris-killing
perpetrators-shall-be-brought-to-justice-jammu-and-kashmir-lg-on-waseem-baris-killing

By

Published : Jul 9, 2020, 11:00 AM IST

பாஜக பிரமுகர் ஷேக் வசீம் பாரி, அவரின் சகோதரர் உமர் சுல்தான், தந்தை பஷீர் ஷேக் அகமது ஆகியோர் அடையாளம் தெரியாத பிரிவினைவாதிகளால் வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியினர் கொலை செய்யப்பட்டதற்கு ஜம்மு - காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் ஜிசி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கண்டனப் பதிவில், ''அப்பாவி மக்களைக் கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமான செயல். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் நீதியின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். உயிரிழந்தவர்களை இழந்து வாழும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க:விகாஸ் துபே கூட்டாளிகள் நான்கு பேர் கைது: 14 துப்பாக்கிகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details