காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர், வயநாடு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டுவருகிறார்.
நாளைய தினம் பல துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முண்டேரியிலுள்ள அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்களின் திறப்பு விழா நடைபெறவிருந்தது.
ஆன்லைன் மூலம் மூலம் நடைபெறவிருந்த இந்த விழாவில் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்தார். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வயநாடு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துவிட்டார்.
அரசு சார்பில் நடைபெறும் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை நலத்துறையால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் திறப்பு விழா குறித்து அரசுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் அனுமதி மறுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் முன் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: தமிழ் பள்ளிக்காக குரல் கொடுத்த குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!