லேஸ் என்னும் சிப்ஸ் நிறுவனம் தாங்கள் காப்புரிமை பெற்ற உருளைக் கிழங்கு வகையை குஜராத் விவசாயிகள் சிலர் பயிரிட்டுள்ளனர். இதனால் அந்த விவசாயிகள் ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என பெப்சி நிறுவனம் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
'பெப்சி' எடுத்த 'திடீர்' முடிவு! - சிப்ஸ் நிறுவனம்
காந்தி நகர்: குஜராத் விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறுவதாக, பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
லேஸ் எனும் சிப்ஸ் நிறுவனம்
இதனால் விவசாய அமைப்பினர் பெப்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெப்சி நிறுவனம் தற்போது குஜராத் விவசாயிகள் மீதான வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பெப்சி நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘அரசுடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவோம்' என தெரிவித்தார்
Last Updated : May 3, 2019, 11:49 AM IST