தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் சிறப்பு ரயிலில் பயணியுங்கள்' : பியூஷ் கோயல் - ரயில்வே அமைச்சகத்தின் அறிவுறுத்தல்

டெல்லி: கடுமையான வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தியாவசியமான தேவைகளாக இருந்தால் மட்டும் ரயிலில் பயணிக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Goyal
Goyal

By

Published : May 29, 2020, 4:30 PM IST

பிகார் மாநிலம், முசாபர்பூர் ரயில் நிலையத்தில், போர்வையால் மூடியபடி கிடத்தப்பட்டிருக்கும் உயிரிழந்த பெண்ணை, அவருடைய குழந்தை எழுப்ப முயற்சிக்கும் காணொலி வைரலானதை அடுத்து ரயில்வே அமைச்சகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டரில் அதற்குப் பதிலளித்துள்ளார்.

அந்தப் பதிவில், 'கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கும் மேலான முதியவர்கள், 10 வயதுக்கும் கீழான குழந்தைகள் என அத்தியாவசியக் காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே ஷ்ராமிக் சிறப்பு ரயிலில், இனி பயணிக்கலாம். அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பும் ரயில்வே துறைக்கு முக்கியம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை போல, மத்திய ரயில்வே அமைச்சகமும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், 'ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் குடி பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மருத்துவ ரீதியான பிரச்னை இருப்பவர்களும் பயணிக்கின்றனர். இது கரோனா எளிதில் பரவக் காரணமாக இருக்கும். உடல்நல பாதிப்புகள் இருந்தவர்கள் ரயிலில் பயணித்ததன் மூலம் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி, உயிரிழந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கார்டியோவாஸ்குலர் நோய்கள், புற்றுநோய், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரயில்களில் பயணிக்க வேண்டாம். தவிர்க்க முடியாத காரணங்களாக இருந்தால் மட்டும் பயணிக்கலாம். ஏதாவது அவசர தேவைகளோ அல்லது மன அழுத்தமோ இருந்தால், உடனே அவசர உதவி எண்களான 139 அல்லது 138 ஆகியவற்றிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் பணிபுரிபவருக்கு கரோனா: 2 தரை தளத்திற்குச் சீல்வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details