சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில் இந்தியாவில் கரோனா பாதிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற தெலங்கானாவைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டது.