"தேர்தல்கள் ஜனநாயகத்தின் திருவிழாக்கள். தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு மாற்றத்திற்காக பிகார் மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துமாறு நான் கூற விரும்புகிறேன்" என்று தேஜஷ்வி யாதவ் ட்விட் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். “கடந்த 15 ஆண்டுகளாக, மாநிலத்தை ஆட்சி செய்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, இளைஞர்களை வேலையில்லாமல் வைத்திருந்தது, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. அவர்களால் மாநிலத்தில் ஒரு தொழிற்துறையை நிறுவ முடியவில்லை. வறுமை நீக்கப்படவில்லை, கல்வி மற்றும் சுகாதார நிலைமை மாநிலத்தில் மோசமடைந்துள்ளது.