நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 80ல் 64 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
'உத்தர பிரதேச மக்கள் சாதி அரசியலை ஒதுக்கியுள்ளனர்..!' - அமித்ஷா! - varanasi
லக்னோ: "உத்தரப்பிரதேச மக்கள் சாதி அரசியலை ஒதுக்கியுள்ளனர்" என்று, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
amit shah
இந்நிலையில் இன்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உத்தரப்பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருந்தனர். அப்போது வாரணாசியில் பேசிய அமித்ஷா, ‘உத்தரப்பிரதேச மக்கள் தற்போது சாதி அரசியலை ஒதுக்கியுள்ளனர். நல்ல வளர்ச்சி திட்டங்களை வரவேற்றதின் வெளிப்பாடுதான் இந்தியா முழுவதும் பாஜக அமோக வளர்ச்சி பெற்றுள்ளது’ எனத் தெரிவித்தார்.