தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

144 தடை உத்தரவு மீறல்!

குஜராத்: அகமதாபாத்தில் 144 தடையை மீறி சாலையில் மக்கள் ஒன்றுகூடி நடனம் ஆடிய குற்றத்திற்காகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

144 தடை
144 தடை

By

Published : Mar 23, 2020, 3:03 PM IST

அகமதாபாத்தில் கரோனா வைரசைத் தடுக்கும் முயற்சியாக 144 தடையை மாநில அரசு பிறப்பித்துள்ளது. மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு முன்னிட்டு நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயங்கவில்லை, மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருந்தனர்.

இதுமட்டுமின்றி மாலை 5 மணிக்கு சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக கை தட்ட பிரதமர் மோடி கூறியிருந்தார். அதேபோல், மக்கள் கைகளைத் தட்டி தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

144 தடை உத்தரவை மீறி சாலையில் ஒன்றுகூடி கர்பா நடனம்

இந்நிலையில், அகமதாபாத் மக்கள் சுய ஊரடங்குக்கான நெறிமுறைகளையே மாற்றினர். அவர்கள் பெருங்கூட்டமாகத் திரண்டு சாலையில் கைகளைத் தட்டியும், டிரம்ஸ் வாசித்தும், கர்பா நடனம் ஆடினர்.

இதைப் பார்த்த காவல் துறையினர், உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி சிலரை வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், சிலர் செல்லாமல் நடனம் ஆடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், காவல் துறையினர், தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவாவது கிரோனாவாவது...! - அதிகத்தூர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details