2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லா யூனியன் பிரதேசமாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்குப் பின், தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்தங்கள் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது ஜம்மு காஷ்மீர் குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.