சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் மழை இல்லாததால், அம்மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் மழைவேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடி, உதேலா என்ற கிராமத்தில் அமைந்துள்ள பழமையான ஒரு கல்லை வழிபட்டு நூதன வழிபாடு நடத்தினர்.
மழைக்காக நூதன வழிபாடு நடத்திய சத்தீஸ்கர் கிராம மக்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்ட கிராம மக்கள் மழைவேண்டி, பழமையான ஒரு கல்லை வழிபட்டு நூதன வழிபாடு நடத்தினர்.
pray fo pray for rainsr rains
பாரம்பரிய மிக்க, பழமையான இந்தக் கல்லை வழிபடுவதன் மூலம் மழை கண்டிப்பாக பெய்யும் என அம்மக்கள் நம்புகின்றனர். இந்த நூதன வழிபாட்டில் கலந்துகொண்ட மக்கள் கல்லை இறுக்கி அணைத்துக்கொண்டு ஆரவாரமிட்டு, மழைபெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். இந்த வழிபாட்டில் சுமார் 84 கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:மழைக்காக வனத்தில் குடியேறிய பொதுமக்கள் - விநோத பூஜை!