காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விடுத்துள்ள அறிக்கையில், "நாடு முக்கியப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. அவசரக்கால சூழ்நிலையைச் சமாளிக்க பொது மக்களுக்கு ஒரு விரிவான பொருளாதாரத் தொகுப்பினை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும்.
இந்த முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வுக் காண்பதற்குப் பதிலாக, பிரதமர் மோடி தனது பொறுப்புகள், கடமைகளில் இருந்து விலகிச் செல்வதற்காக வியத்தகு செயல்களைக் கொண்டுவருகிறார். வைரஸ் பரவலைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள், விரைவான சோதனையைத் தொடங்குவது போன்ற முக்கியப் பிரச்னைகள் குறித்து பிரதமர் பேசுவார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல், நமது சுகாதார அமைப்பை மேம்படுத்துதல் அவசியம். மிக முக்கியமாக, திட்டமிடப்படாத இந்தப் பூட்டுதலின் தாக்கத்தின் கீழ் நாடு முழுவதும் மக்கள் திணறுகிறார்கள்.