தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

”தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து மக்கள் ஒழுங்குமுறையை எதிர்பார்க்கின்றனர்” - குடியரசுத் தலைவர்

காந்திநகர் : தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து மக்கள் ஒழுங்குமுறையை எதிர்பார்ப்பதாகவும், நாடாளுமன்றத்தில் சுமூகமான விவாதம் நடைபெறுவதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர்
குடியரசு தலைவர்

By

Published : Nov 25, 2020, 5:38 PM IST

அகில இந்திய தலைமைத் தேர்தல் அலுவலர்களின் 80ஆவது மாநாடு குஜராத் மாநிலம் கேவாடியா கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து மக்கள் ஒழுங்குமுறையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர சபை நாகரிகத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தவறான முறையில் செயல்பட்டால் மக்களின் உணர்வுகளை அது புண்படுத்தும்.

ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டும் வகையில் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில்தான் பல சவால்கள் உள்ளன. பிரதிநிதிகள் நாடாளுமன்ற வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேவையற்ற செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சுமுகமான விவாதம் நடைபெறுவதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details