வட மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் சிற்றாற்றை கடக்கும் மக்கள்: வைரல் வீடியோ! - குல்லு மாவட்டம்
சிம்லா: குல்லு மாவட்டத்தில் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தோபி, போஜலுக்கிடையே உள்ள சிற்றாற்றை மனித சங்கிலி மூலம் மக்கள் ஆபத்தான முறையில் கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
viral video
இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கிடையில் தோபி, போஜலுக்கிடையே உள்ள சிற்றாற்றில் வெள்ளம் ஆர்பரித்து ஓடுகிறது. அதனை மனித சங்கிலி மூலம் மக்கள் ஆபத்தான முறையில் கடக்கின்றனர். இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.