தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருடன் என்று கூறிய பொதுமக்கள்: திணறிய விஜய் மல்லையா! - விஜய் மல்லையா

ஒருநாள் உலகக்கோப்பை பார்க்கச் சென்ற விஜய் மல்லையா, மைதானத்தை விட்டு வெளிவரும்போது பொதுமக்கள் அவரை திருடன் என்று கோஷமிட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijay mallaya

By

Published : Jun 10, 2019, 8:42 AM IST

Updated : Jun 10, 2019, 9:07 AM IST

2019ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30ஆம் தேதி தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி விளையாடும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

அப்போது, கிரிக்கெட் போட்டியைக் காண தொழிலதிபரும், வங்கிக் கடன் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான விஜய் மல்லையா தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது அவர், நான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கத்தான் வந்தேன் என்று கூறினார்.

விஜய் மல்லையாவை திருடன் என கோஷமிட்ட மக்கள்!

இந்நிலையில், போட்டி முடிவடைந்து மைதானத்தை விட்டு வெளியே வரும்போது, போட்டியை பார்க்கவந்த ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் அவரை சோர் ஹேய் (திருடன்) என்று அழைத்து கோஷமிட்டனர். அப்போது அவர், 'என்னுடைய சிந்தனையெல்லாம், என்னை திருடன் என்று மக்கள் கோஷமிடுவதை கண்டு என் தாய் வேதனையடைக் கூடாது, அவரை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் இருந்தது' என்று கூறினார்.

Last Updated : Jun 10, 2019, 9:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details