தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீனப் பொருள்கள்: ஒருபுறம் புறக்கணிப்பு… மறு புறம் தக்கவைப்பு… உமர் அப்துல்லா விமர்சனம்

ஸ்ரீநகர்: சீனப் பொருள்கள், நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அரசு கூறிவரும் வேளையில், ஐபிஎல் தொடருக்கான விளம்பரதாரராக சீன நிறுவனங்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

people-boycott-chinese-products-ipl-retains-chinese-sponsors-omar
people-boycott-chinese-products-ipl-retains-chinese-sponsors-omar

By

Published : Aug 3, 2020, 2:28 PM IST

ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக்கில் அமைந்துள்ள இந்திய- சீன எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், மத்திய அரசு 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. மேலும், மக்கள் சீன பொருள்களை புறக்கணிக்குமாறும் தெரிவித்தது. தற்போது புதிய கல்விக்கொள்கையில் விருப்ப மொழி பாடத்திலிருந்து சீன மொழியை நீக்கியுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு சீன தொலைபேசி நிறுவனமான விவோ உள்ளிட்ட அனைத்து விளம்பரதாரர்களையும் தக்கவைத்துக்கொள்ள இந்தியன் பிரீமியர் லீக் முடிவு செய்துள்ளது. இந்த விவோ நிறுவனம் ஐபிஎல் தொடரின் முக்கிய விளம்பரதாரராகவே தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், பிசிசிஐ விவோ நிறுவனம் ஐந்தாண்டிற்கான விளம்பரதாரராக நீடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒருபுறம் சீனப் பொருட்களுக்கு எதிர்ப்பும், மறுபுறம் ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனத்தின் ஸ்பான்ஸரும் இருப்பது வியப்பாக இருக்கிறது என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, "சீன பணம், முதலீடு, விளம்பரங்களை எவ்வாறு கையாள்வது என்பதில் நாம் குழப்படைந்துள்ளபோது, சீனர்கள் நம்மை சீண்டுவதில் ஆச்சரியமில்லை.

மக்கள் சீனப் பொருட்களைப் புறக்கணித்து வரும்போது, ஐபிஎல் போட்டித் தொடருக்கு சீன நிறுவனம் விளம்பரதாரராக தொடர்வது வியப்பை அளிக்கிறது.

இதையறியாத மக்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சியைத் தங்கள் வீட்டிலிருந்து தூக்கி எறிந்து உடைத்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.

சீன நிறுவனங்களின் விளம்பரங்கள் இன்றி நம்மை நிர்வகிக்க முடியாது என்று நாம் எப்போதும் சந்தேகிக்கிறோம்.

இந்த நடவடிக்கையின் திடீர் தன்மை, நகர்வின் எதிர்பாராத தன்மை, நகர்வின் கணிக்க முடியாத தன்மை. சீனர்களைத் தாக்கியது அவர்களுக்குத் தெரியாது. இப்போது சீனர்களுக்குத் தெரியும் . நாங்கள் எப்போதும் சந்தேகித்தவை அவர்களின் விளம்பரங்கள் இல்லாமல் எங்களால் உண்மையில் நிர்வகிக்க முடியாது என்று” எனத் தெரிவித்துள்ளார்.

சீனப் பொருள்கள், நிறுவனங்களை தடை செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டுவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் பிபிசிஐ-யின் செயலராக உள்ளபோது, இந்த முடிவு எட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details