நாடெங்கும் கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி நடந்துகொள்பவர்கள் மீது வழக்கு பதியும் நிலையும் இருந்துவருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஊரடங்கு விதியை மீறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28,000 பேர் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக தலைமைச் செயலர் ராஜிவா சின்ஹா தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதியிலிருந்து பதியப்பட்ட வழக்குகளில் இந்த எண்ணிக்கை உள்ளதாக அவர் கூறினார்.
பாதுகாப்பு தடைகளை பின்பற்றாமல் இருந்ததற்காக சுமார் 3,000 வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை 839 பேரை ஊரடங்கு உத்தரவை மீறி முகக் கவசம் இல்லாமல் வெளியே வந்ததற்காகவும், பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காகவும் கொல்கத்தா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.