புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்து தானாம்பாளையம் பகுதியில் மாலை நேரத்தில் மயில் ஒன்று விவசாயி வீட்டுச் சுவற்றில் மயங்கிய நிலையில் மோதியதால் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தவளக்குப்பம் காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் இறந்த மயிலை ஒப்படைத்தனர். பின்னர் காவலர்கள் அதனை புதுச்சேரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இறந்த மயிலை உடற்கூறாய்வு மேற்கொண்டனர்.