ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நடந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சிறப்புத் திட்ட முகாமில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்துகொண்டார்.
'இந்தியா பலமாக இருந்தால்தான் அமைதி நிலவும்' - மத்திய அமைச்சர் - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
ராஜஸ்தான்: இந்தியா பலம் வாய்ந்ததாக இருந்தால் மட்டுமே நாட்டில் அமைதி நிலவும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆசிரியர்கள் நாட்டின் வளர்ச்சியைக் கட்டியெழுப்ப முக்கிய பங்காற்றிவருகின்றனர் என்றும் நமது நாடு பாரம்பரியம் மிக்க கல்வியைக் கொண்டுள்ளது எனவும் கூறினார். இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கும்போது மட்டுமே நாட்டில் அமைதி நிலவும், நீடிக்கும் என்றார்.
கடவுளே குரு அதற்கான வழியையும் அவரே காட்டுகிறார் என்று மும்மூர்த்திகள் கூறியிருக்கின்றனர் என்றும் மிகச் சிறந்த கல்வி வளம் மிக்க நாடாக இந்தியா இருப்பது பெருமைக்குரியது எனவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.