இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்கும்விதமாக நாட்டில் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இதில் கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கரோனாவால் ஏற்படப்போகும் பொருளாதார சமூக சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அம்சங்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.