ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் கட்சிகளின் பங்கேற்பு, அரசியல் கலாசாரம், மனித உரிமைகள் ஆகியவையின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதுகுறித்து பல தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். கனிமொழியைத் தொடர்ந்து சிதம்பரம் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். "ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்திய 10 இடங்கள் கீழே சென்றுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை உற்று கவனித்தால் ஜனநாயகம் சீரழிந்துள்ளதும் ஜனநாயக நிறுவனங்கள் வலுவிழந்துள்ளதும் தெரியவரும். அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுகின்றனர்.