இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், “கடந்த பல ஆண்டுகளாக பாஜக அரசு தன்னால் ஆள முடியாத மாநில அரசுகள் மீது குறிவைத்து அதை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது.
சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப்பின் முதலமைச்சர் கெலாட் கோரிக்கை
சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆளும் அரசுகளை கவிழ்ப்பதே பாஜக அரசின் வேலையாக உள்ளது. எனவே, ராஜஸ்தான் மாநில ஆளுநர் சட்டபேரைவை கூட்ட சொல்லி, முதலமைச்சர் அசோக் கெலட்டை பெருபாண்மையை நிரூபிக்க உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் பாஜகவுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இதைத் தொடர்ந்து சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனக் கூறி அவரது துணை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சச்சின் பைலட் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் குற்றச்சாட்டு!
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என இவ்வழக்கில் ஜூலை 24ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.