ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன பணபரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ப.சி கைது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து! - தலைவர்கள் கருத்து
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகப் படுகொலை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
Chidambaram
இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல, நாட்டின் உள்துறை மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றியவர். சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என்றும், அவர் பொருளாதார குற்றவாளி, தேசவிரோதி போல் உருவகப்படுத்த முயறிசிக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
- டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது, முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.