தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அராஜக தேச பக்தி தோல்வி அடையும் - ப. சிதம்பரம்

டெல்லி: அராஜக தேச பக்தியை அமைதியான முறையில் வீழ்த்துவோம் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Chidambaram

By

Published : Oct 24, 2019, 8:01 PM IST

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 103, சிவசேனா 56 என இந்தக் கூட்டணி 159 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

ஹரியானாவைப் பொறுத்தவரை பாஜக 40, காங்கிரஸ் 31, ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், இது குறித்து மத்திய முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அராஜக தேச பக்தியை அமைதியான தேச பக்தி வீழ்த்தும் எனத் தெரிவித்தார்.

ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் யாருக்கு என்னும் போட்டி பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவிவருகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிக்கி சிதம்பரம் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ப. சிதம்பரத்திற்கு காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details