ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டு தலைமறைவாக இருக்கிறார் என கூறப்பட்ட நிலையில், ப. சிதம்பரம் டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
"நான் தலைமறைவா?"- ஊடகங்கள் முன் தோன்றிய ப.சிதம்பரம் - inx media case
டெல்லி: எனக்கும், ஐ.என்.எக்ஸ் வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
!["நான் தலைமறைவா?"- ஊடகங்கள் முன் தோன்றிய ப.சிதம்பரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4202699-thumbnail-3x2-chi.jpg)
அப்போது அவர் பேசுகையில், ’ஐ.என்.எக்ஸ் மீடியா பணப் பரிமாற்றத்தில் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் மீதும், என் குடும்பத்தார் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் இல்லை. இந்த வழக்கை எதிர்கொள்வதற்கான முன் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளேன்’ என்றார்.
இதனையடுத்து டெல்லியில் இருக்கும் அவரது வீட்டுக்கு சிதம்பரம் சென்றார். சிபிஐயும் அங்கு வர இருப்பதால் அவர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.