ஆந்திர மாநிலம், ராஜ்முந்திரியில் ஜனசேனா கட்சியின் ஐந்தாம் ஆண்டு துவக்க நாள் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவண் கல்யாண் கலந்துக் கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, ஆந்திர மாநில சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக எங்கள் கட்சி அனைத்து விதத்திலும் தயாராகி வருகிறது.