தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுத்த ஜெயலலிதாவை கண்டுபிடித்தார் ராமமோகன் ராவ்! - பவன் கல்யாண்

விஜயவாடா: "ஜெயலலிதாவின் திறமையை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன்" என்று தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் கூறியுள்ளார்.

rama

By

Published : Feb 12, 2019, 1:13 PM IST

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்தவர் ராமமோகன் ராவ். ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம்பிடித்தவர். ஜெயலலிதாவின் மறைவையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்ட வருமான வரித்துறை சோதனை அவரது வீட்டிலும் நடத்தப்பட்டது. அப்போது தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் கிலோ கணக்கில் தங்கமும், லட்ச கணக்கில் ரூ 2,000 புதிய நோட்டுகளும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. முக்கியமாக தமிழக அரசியல் வரலாற்றில், தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனைகளும் முதன்முறையாக நடந்தேறியது. இதனையடுத்து ராமமோகன் ராவ் சைலண்ட் மோடில் இருந்தார்.

ram

இந்நிலையில், நடிகர் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவில் ராமமோகன் ராவ் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியில் அரசியல் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்த பிறகு அவர் பேசுகையில், பவன் கல்யாண் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பது ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பு. ஜெயலலிதாவின் திறமையை பவன் கல்யாணிடம் நான் பார்க்கிறேன். ஜெயலலிதா, ஒரு அரசியல்வாதியின் இதயம் மக்களுடன் இருக்க வேண்டும் என எனக்கு கற்றுக் கொடுத்தவர். பவன் கல்யாண் அதேபோல் என நினைக்கிறேன். நான் ஜெயலலிதாவிடம் பணியாற்றியது போலவே பவனுடன் இருப்பேன், என்றார்.

ABOUT THE AUTHOR

...view details