உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இதய நோயாளி ஒருவரை, அவரது உறவினர்கள் அம்மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். நோயாளியைப் பரிசோதித்த மருத்துவர், இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தனது மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், வேறொரு மருத்துவமனைக்குச் செல்லுமாறும் பரிந்துரைத்துள்ளார்.
இதனையடுத்து கோபமடைந்த நோயாளியின் உறவினர்கள், திடீரென்று அவரச சிகிச்சைப் பிரிவு அறையிலுள்ள மேசை, நாற்காலிகள் ஆகியவற்றை உடைத்து, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இக்காட்சி அந்த அறையிலுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
பொருள்களை அடித்து நொறுக்கும் காட்சி இது குறித்து மருத்துவர் ராகேஷ் மிட்டல் கூறுகையில், '' எங்களது மருத்துவமனையை இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு மருத்துவமனை என்று எண்ணி நோயாளியின் உறவினர்கள் அவரை இங்கு அழைத்து வந்தனர். ஆனால், நாங்கள் இதய நோய்களுக்கென்று பிரத்யேகமாக சிகிச்சையளிப்பதில்லை என்று கூறினோம். அவ்வாறு கூறியும் நோயாளியை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் மறுத்து விட்டார்கள். நாங்கள் அவரை அழைத்துச் செல்ல மேலும் வற்புறுத்திய உடன், அவர்கள் மேசைகளை உடைத்தும் ஊழியர்களை தாக்கியும் நோயாளியை அழைத்துச் சென்றனர் '' என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் தனியார் குளிர்பான தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்