நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கரோனாவின் தாக்கம் அதிதீவிரம் அடைந்துள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்திலுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இதனால், கரோனா நோயாளிகள் உள்பட பிற நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம்! - கரோனா நோயாளிகள்
முப்பை: மகாராஷ்டிராவில் கரோனா தொற்று பரவல் அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவிடியா அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தரையில் படுத்துக் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கோவிடியா அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 600 நோயாளிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உள்ளனர். மருத்துவமனை இன்னும் கட்டுமானத்தில் இருப்பதால், குறிப்பாக கரோனா அல்லாத நோயாளிகளுக்கு இடமளிப்பது மருத்துவமனை அலுவலர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. கரோனா வைரஸ் அல்லாத நோயாளிகளுக்கு மொத்தம் 35 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு மட்டுமே மருத்துவமனையில் உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
மாநிலத்தில், தற்போது மழைக்காலம் என்பதால் கரோனா அல்லாத மற்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாகப் பேசிய அத்தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோபால் அகர்வால், "மருத்துவமனையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு இடமளிப்பதன் மூலம் மருத்துவமனையிலேயே தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இந்தப் பிரச்னையை உயர் அலுவலர்களுடன் எழுப்பியுள்ளோம். இது மிகவும் துரதிருஷ்டவசமானது" என்றார்.