தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வென்டிலேட்டரின் மின் இணைப்பை துண்டித்த உதவியாளர் - உயிரிழந்த நோயாளி! - கோட்டா மாவட்டம்

கோட்டா : ஐ.சி.யூ வார்டில் வென்டிலேட்டரின் மின் இணைப்பை தெரியாமல் துண்டித்த உதவியாளரால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

patients-attendants-remove-ventilators-plug-for-air-cooler-man-dies
patients-attendants-remove-ventilators-plug-for-air-cooler-man-dies

By

Published : Jun 16, 2020, 3:25 PM IST

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இயங்கி வருகிற மஹாராவ் பீம்சிங் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வினோத் (40) என்பவர் கடந்த சில நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன் 15) வென்டிலேட்டர் இயங்குவது நின்றுபோய் திடீரென அவருக்கு வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் வினோத்தை கவனித்துவந்த அவரது உதவியாளர், இந்த தகவலை உடனடியாக மருத்துவர்களிடம் கூறினார்.

விரைந்து வந்த மருத்துவர்கள் வினோத்தை பரிசோதித்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், வினோத்திற்காக வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டரின் மின்சாரம் அகற்றப்பட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். வென்டிலேட்டருக்கு வரும் ஸ்விட்ச் போர்டில் ஏர் கூலரை அவரது உதவியாளர்கள் இணைத்ததால் வென்டிலேட்டர் செயலிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை இயங்கும் அந்த வென்டிலேட்டர், பேட்டரியும் குறைந்ததால் வேலை செய்வதை நிறுத்தியதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் நோயாளி வினோத்தின் உதவியாளரின் செயலை காரணம் காட்டியுள்ளது. உயிரிழந்த நோயாளி வினோத்தின் குடும்பத்தினர், மருத்துவமனையில் அலட்சியத்தால்தான் அவர் இறந்ததாக குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதார அலுவலர்கள் வினோத்தின் குடும்பத்தினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். நோயாளி வினோத்தின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details