உத்திரப் பிரதேச மாநிலம் பிரோஜாபாத்தில் ஒருவருக்கு காதில் காயம் ஏற்பட்டு, அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அந்த மருத்துவமனையில்மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது. ஜெனரேட்டர் பழுதான காரணத்தால் அதனை வைத்தும் மின்சாரத்தை கொண்டுவர இயலவில்லை, என்று அப்போது பணியிலிருந்த மருத்துவர் அபிஷேக் கூறியுள்ளார்.
செல்போன் லைட் மூலம் சிகிச்சை அளித்த மருத்துவர்!
லக்னோ: சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சார பாதிப்பின் காரணத்தால், செல்போன் லைட் மூலம் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
phone flash light
காயத்தினால் அவதிப்பட்ட நபருக்கு வேறு வழியின்றி செல்போன் லைட் மூலம் மருத்துவர் சிகிச்சை நடத்தியுள்ளார். இது தொடர்பாக, தலைமை மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக சீர் செய்யப்படும் என்றும், இனி இந்த நிலை மருத்துவமனையில் ஏற்படாது என்றும் மருத்துவர் அபிஷேக் தெரிவித்துள்ளார்.