மருத்துவமனையில் ஆக்சிஜன் வசியில்லாததால் குழந்தைகள் உயிரிழப்பு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாதததால் சிறுமியின் சடலத்தை வீடு வரை தூக்கிச் சென்ற அவலம் போன்ற செய்திகள் தற்போது அடிக்கடி சமூக வலதளங்களை ஆக்கரமித்து வருகின்றன.
உயிருக்கு ஆபத்து என்றாலும் 5 கி.மீ ஓட வேண்டும்... ஒடிசாவின் அவல நிலை! - லை வசதி இல்லாததால் பெண் நோயாளியை ஸ்ட்ரெச்சரிலேயே 5 கிமீ வரை கிராமத்தினர் தூக்கி சென்ற சம்பவம்
கியோன்ஜோர்: ஆம்புலன்ஸ் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாததால் பெண் நோயாளியை 5 கி.மீ தூரம் வரை கிராமத்தினர் தூக்கிச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோன்று ஒடிசா மாநிலம் கியோன்ஜோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாததால் உடல்நிலை சரியில்லாத பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 5 கி.மீ வரை தூக்கிச் சென்ற அவலம் நேர்ந்துள்ளது.
அதையடுத்து, அந்த பெண், ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடயே சமூகவலதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ‘உயிருக்கு ஆபத்து என்றாலும் 5 கிமீ ஓட வேண்டுமா? பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு திட்டங்கள் அறிவித்து நிறைவேற்றினாலும் அது மக்களுக்கு பயனில்லாமல் தான் இருக்கும்’ உள்ளிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.