காஷ்மீர் பிரச்னை குறித்து பாஜக தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு - காஷ்மீரில் அடுத்த ஆறு மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்கும் என நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
'காஷ்மீர் பிரச்னையை படேல் அணுகியிருந்தால் இந்திய வரலாறு மாற்றி அமைக்கப்பட்டிருக்கும்' - நேரு
டெல்லி: காஷ்மீர் பிரச்னையை நேரு அணுகாமல் வல்லபாய் படேல் அணுகியிருந்தால் இந்திய வரலாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ள காஷ்மீர் பிரச்னை குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், "மற்ற மாகாணங்களை இணைத்தது போன்று காஷ்மீரையும் வல்லபாய் படேல் இணைத்திருந்தால் இந்திய வரலாறு மாற்றிமைக்கப்பட்டிருக்கும்.
நேரு தான் காஷ்மீர் பிரச்னைக்கு மிக்கிய காரணம். வல்லபாய் படேலை ஆலோசிக்காமல் காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தானுக்கு வழங்கியது தவறு. இப்போது எங்களை குறை சொல்லும் அனைவருக்கும் காஷ்மீர் பிரச்னைக்கு 370ஆவது சட்டப்பிரிவு நிரந்தர தீர்வு அல்ல என்பது தெரியும்" என்றார்.