தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பதஞ்சலி கோவிட்-19 மருந்து சர்ச்சை - ராம்தேவ் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

ஜெய்ப்பூர்: பதஞ்சலி ஆயுர்வேத் தலைமை நிர்வாக அலுவலர் ஆசாரியா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது ஜோதி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடித்ததாக பொய்யான தகவலை பரப்பி வருவதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பதஞ்சலி பாபா ராம்தேவ்
பதஞ்சலி பாபா ராம்தேவ்

By

Published : Jun 28, 2020, 3:27 AM IST

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகவும், இதனை பரிசோதித்து பார்த்ததில் 100 விழுக்காடு அளவு நோயாளிகள் குணமடைந்ததாகவும் யோகா குரு ராம்தேவ் தனது நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத் தயாரித்த ‘கரோனில்’ எனும் மருந்தை சந்தைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பியதையடுத்து, அரசு இம்மருந்தை கரோனா பெயர் சொல்லி விளம்பரப்படுத்தக் கூடாது என்று எச்சரித்திருந்தது.

பதஞ்சலி சர்ச்சை: 100 விழுக்காடு தீர்வு; ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் உறுதி!

இதனையடுத்து இதற்கான விளக்கங்கள் பலமுறை பதஞ்சலி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இச்சூழலில் பதஞ்சலி ஆயுர்வேத் தலைமை நிர்வாக அலுவலர் ஆசாரியா பால்கிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது ஜோதி நகர் காவல் நிலையத்தில் கரோனா மருந்து கண்டுப்பிடித்ததாக கூறியது தொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details