பாபா ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி நிறுவனம், மாவு விலையை 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சக போட்டி நிறுவனங்கள் எதுவும் விலையை உயர்த்தாத நேரத்தில், இந்த ஊரடங்கு காலத்தில் பதஞ்சலி நிறுவனம் மட்டும் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகிறது.
இதனால் நுகர்வோர், மளிகைப் பொருட்கள் விற்பவர்கள் என இரு தரப்பினருமே அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து பேசிய மளிகைப் பொருட்கள் விற்பனையாளர் ஒருவர், 10 கிலோ கோதுமை மாவை 340 ரூபாய்க்கு முன்னதாக விற்று வந்த பதஞ்சலி நிறுவனம், தற்போது 375 ரூபாய்க்கு விற்பதாக வேதனை தெரிவித்தார்.
கோதுமையின் விலையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என்றும், இதுபோன்ற காலகட்டத்தில் இந்த விலையேற்றம் ஏற்றுக்கொள்ளப்படாதது என சந்தைப்படுத்துதல் பிரிவு அலுவலர்கள் இந்த விலை உயர்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ம.பி.யில்., பிறந்து 9 நாளே ஆன குழந்தைக்கு கரோனா உறுதி!