தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தான்; கரோனா மருந்து அல்ல! - ஆயுஷ் அமைச்சகம்

டெல்லி: யோகா குரு ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத், சில தினங்களுக்கு முன் கரோனாவுக்கான மருந்து 'கரோனில்' என்றுகூறி அதனை சந்தைப்படுத்தி வந்தனர். தற்போது அம்மருந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தாக மட்டும் சந்தைப்படுத்த மத்திய அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

பதஞ்சலி கரோனா மருந்து
பதஞ்சலி கரோனா மருந்து

By

Published : Jul 2, 2020, 9:47 AM IST

பதஞ்சலி நிறுவனத்தின் 'கரோனில்' ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

ஜூன் 22ஆம் தேதி பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அறிமுகப்படுத்திய 'கரோனில்' என்ற மருந்து குறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பல கேள்விகளை எழுப்பியது. அதே நேரம் அதை கரோனா மருந்து என விற்பனை செய்யக்கூடாது எனும் தடையையும் விதித்தது.

இச்சூழலில் கரோனில் மருந்து கரோனாவை குணமாக்கும் என்று சொல்லவில்லை என்றும், கரோனா நோயாளிகள் அதை எடுத்துக் கொண்ட போது, அவர்களுக்கு உடல் நிலையில் நல்ல மாற்றம் கிடைத்தது என்றும் பதஞ்சலி நிறுவனம் ஜூன் 30ஆம் தேதி விளக்கமளித்தது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் 'கரோனில்' மருந்தினை நோய் எதிர்ப்பு சக்தி ஊக்க மருந்தாக மட்டும் விற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இது கரோனாவை குணமாக்கும் மருந்து என கூறி விற்பனை செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது.

'எங்க மருந்து கரோனாவைக் குணப்படுத்தும்னு நாங்க சொல்லவே இல்லையே' - பதஞ்சலி அந்தர்பல்டி

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த யோகா குரு ராம்தேவ், "கரோனாவை எதிர்கொள்ள பதஞ்சலி சரியான பணியை செய்திருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி சரியான பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைப்பில் இருக்கும் மாநிலப் பிரிவிடம் இதற்கு உரிமம் பெற்றுள்ளோம். கரோனா சிகிச்சை என்ற வார்த்தையை ஆயுஷ் அமைச்சகம் உபயோகப்படுத்தவில்லை. ஆயுஷ் அமைச்சகத்துடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது கரோனில், சுவாசரி உள்ளிட்டவற்றுக்குத் தடையில்லை.

சுவாசரி, கரோனில் தொகுப்பு மருந்துகள் இன்று முதல் நாடு முழுவதும் எவ்வித சட்டரீதியிலான இடையூறுகளின்றி கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்துக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."

ஊரடங்கின் மத்தியில் உணவுப் பொருள் விலையை உயர்த்திய பதஞ்சலி நிறுவனம்!

முன்னதாக, 'கரோனில்' மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details